Skip to main content

கோயில் ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கக் கோரிய வழக்கு!- இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020

 

temples priest relief fund chennai high court tamilnadu government

 

கோயிலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் உதவித் தொகை வழங்கக் கோரி, தினமலர் பத்திரிகை ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால்ஜி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. 

 

அப்போது மனுதாரர் சார்பாக, மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் மற்றும் வழக்கறிஞர் கௌசிக் சர்மா ஆகியோர் ஆஜரானார்கள். ராஜகோபால் முன்வைத்த வாதத்தில் - இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை  தாக்கல் செய்த பதில் மனுவை நாங்கள் பார்த்தோம். அதில் பல முரண்பாடுகள் உள்ளன. தமிழக அரசு அரசாணையில் 8 ஆயிரத்து 340 பேர்தான் பலன் பெறுகிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. ஆனால், இந்துசமய அறநிலையத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் கோயில் பூசாரிகளுக்கு நாங்கள் உதவித்தொகை வழங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுதவிர, கிராமக் கோயில்கள் எல்லாவற்றையும் நிர்வகிக்க கிராமப் பூசாரிகள் என்ற அமைப்பு உள்ளது.  அந்த அமைப்பு மூலம்தான், நிவாரண உதவித்தொகை 8 ஆயிரத்து 340 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளனர்.  

 

இதில் உள்ள அனைத்துத் தகவல்களும் முரண்பாடாக உள்ளன. எனவே, கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் மட்டும் அர்ச்சகர் அல்லாதவர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும், இசைக் கலைஞர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கும், அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள்தான். இதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறினார்.

 

இந்துசமய அறநிலையத்துறை சார்பாக வழக்கறிஞர் வெங்கடேஷ் ஆஜராகி, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். கோயில் பணியில் ஈடுபட்ட பூசாரிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கி விட்டது.  மற்றவர்கள் அரசு ரேஷன் கடை மூலம் வழங்கும் உதவித் தொகையைப் பெற்றுள்ளார்கள். எனவே, மேலும் தனியாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றார்.  

 

இதைக்கேட்ட நீதிபதிகள், இதுவரை தமிழகத்தில் எந்தக் கோயில் திறந்திருக்கிறது? எந்தக் கோயில் மூடி உள்ளது? எனக் கேள்வி கேட்டனர். அதற்கு, அரசு வழக்கறிஞர், கிராமத்தில் உள்ள கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. மற்றவை மூடப்பட்டுள்ளன என்று கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? எத்தனை கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன? அதில் பூசாரிகள் எத்தனை பேர்? மற்ற ஊழியர்கள் எத்தனை பேர்? என்ற பட்டியலை இந்துசமய அறநிலையத்துறை வருகிற 22- ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பட்டியலைப் பார்த்துதான், நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

அர்ச்சகர் உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்; எழுந்த சர்ச்சை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Controversy arose Police in priest's garb on security duty in U.P

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அர்ச்சகர் உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பதாக, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் வீடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு, ஏராளமான மக்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அர்ச்சர்கள் உடைகளை அணிந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோவை, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆண் போலீசார் வேட்டி மற்றும் குர்தாவிலும், பெண் போலீசார் சல்வார் குர்தாவிலும் உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவில் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது, “காவல்துறை கையேட்டின்' படி காவலர்கள் அர்ச்சகர் போல் வேஷம் அணிவது சரியா? இப்படி உத்தரவு பிறப்பிப்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். நாளை, இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பாவி பொதுமக்களை யாராவது சூறையாடினால், உ.பி அரசும், நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? இந்த முடிவு கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.