தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை!

Temples open on all days - BJP Welcome!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களுக்கான எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவெடுத்த அரசுக்குப் பாராட்டுக்கள். நவராத்திரி திருநாளில் தமிழ்நாடு பாஜகவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களைத் திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe