Advertisment

கோயில் ஊழியர்களுக்கு ரூபாய் 1,000 பொங்கல் போனஸ்!

temples employees pongal bonus announced

Advertisment

கோயில் ஊழியர்களுக்கு ரூபாய் 1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறைத் தெரிவித்துள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கோயில் ஊழியர்கள் அனைவருக்கும் ரூபாய் 1,000 பொங்கல் போனஸ் வழங்கப்படும். முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் என அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்கப்படும். முதுநிலை மற்றும் முதுநிலையல்லாத அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். 2019 - 20ல், 240 நாட்கள் பணியாற்றியவர்களுக்குபோனஸ் வழங்கப்படும். 240 நாட்களுக்குள் பணியாற்றியவர்களுக்கு பணிபுரிந்த நாட்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

employees pongal bonus temples
இதையும் படியுங்கள்
Subscribe