/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kovil 666.jpg)
சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கே.கே.நகரில் உள்ள வினாயகர் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. இதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். அந்த மண்டபத்தில் சுமார் ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மண்டபத்தின் உள்ளே செல்லும் வழியில் உள்ள நுழைவாயிலின் மேல்பகுதி மழைக்காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த விரிசல் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்று கூறிவரும் நிலையில், இதனை சரி செய்யாமலேயே இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டாம் என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த சிலர்.
இதனை அரசு அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு எந்த விபரீதமும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை சிலர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
Follow Us