Advertisment

மாணவியை மயக்கி கர்ப்பமாக்கிய கோவில் பூசாரி... புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை் சேர்ந்த 11 ஆம் வகுப்புபடித்து வரும் மாணவி ஒருவருக்குசில நாட்களுக்கு முன்பு வயிற்று வலி ஏற்பட்டதில் அவளது தாயும் சகோதரியும் விசாரித்திருக்கிறார்கள். அது சமயம் அவள் 6 மாதம் கர்ப்பம் என்று தெரிய வர அதிர்ச்சியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. குறைபிரசவம் என்பதால் அந்தக் குழந்தையை மாணவியின் சகோதரி வீட்டில் புதைத்தனர். இது குறித்த தகவல் மாவட்ட எஸ்.பி.க்கு தெரியவர அவரது உத்தரவின்படி புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisment

 Temple priest who seduces student... shocking incident in tutucorin

இதில் அதே பகுதியைச் சேர்ந்த கோவில் பூசாரியும், டி.வி.மெக்கானிக் ராஜூ (48) என்பவரும் அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிக் கர்ப்பமாக்கியது தெரியவர அவர்களிருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விமலா கைது செய்தார்.

Advertisment

விசாரணையில் டி.வி.மெக்கானிக் ராஜூவின் மனைவியும் மகளும் வேலை நிமித்தம் வெளியே வென்று விடுவர். வீட்டில் ராஜூ மட்டும் தனியே இருப்பார். ஏழை மாணவியின் தந்தைக்கோ உடல் நலம் பாதிப்பு. தாய் கூலி வேலைக்குப் போய்விடுவார். வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட ராஜூ அவளை தன் வீட்டிற்கு டி.வி. பார்க்க வருமாறு அழைத்து ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்தது மகளிர் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

 Temple priest who seduces student... shocking incident in tutucorin

பரபரப்பான கட்டத்தில் சகோதரி வீட்டில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைப் போலீசார் தூத்துக்குடி தாசில்தார் செல்வகுமார் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

பாலியல் பலாத்காரச் செயலால் அப்பாவி 16 வயது மாணவி கர்ப்பமாக்கப்பட்ட கொடூரமும் நடந்தேறியிருக்கிறது.

arrest Investigation police Sexual Abuse tutucorin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe