கோவில், மடம், அறக்கட்டளை, வக்ஃபோர்டு, தேவாலயங்கள் ஆகியவற்றிற்கு சொந்தமான இடங்களில் குடியிருப்பவர்கள் சாகுபடியாளர்கள், சிறுவனிகம் செய்பவர்களுக்கு அறநிலைய சட்டம் 34ன் படி நியாயமான விலையை தீர்மானித்து அவர்களுக்கே சொந்தமாக்கக் கோரி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர் சாகுபடி செய்வோர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிபிஐ-எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர்.