ADVERTISEMENT

8 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட கோயில் - போலிஸ் பாதுகாப்போடு திருவிழா 

05:50 PM Oct 20, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், காட்பாடி பனமடங்கி அடுத்த காளாம்பாட்டு கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் காளம்பட்டு கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். அப்போது சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அந்த கோயில் முன்பு குவிவர். இதனால் பெரும் ஆட்டம் - பாட்டத்துடன் திருவிழா நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்த கோவில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடத்துவதிலும் கோவில் உரிமை கொண்டாடுவதில் இருதரபினர்க்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அது பெரும் மோதலை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்தியால் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் திருவிழா நடத்துவதை தடை செய்து, கோயிலை பூட்டினர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காளியம்மன் கோவில் பூட்டப்பட்டது.

எங்களுக்கு தான் கோயிலில் முழு உரிமை, அதனை அங்கீகரிக்க வேண்டும்மெனக்கேட்டு இருதரப்பினதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், காளியம்மன் கோவில் ஊருக்கு பொதுவானது எந்த சாதிக்குமானதல்ல என்று கூறி தீர்ப்பளித்துள்ளது. அதனை அடுத்து காட்பாடி வட்டாட்சியர் ஜெயந்தியை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளின் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்ட ஒரு குழு அமைத்து நிர்வாகம் செய்ய வருவாய்த்துறை உத்தரவிட்டது.

8 ஆண்டுகளாக பூட்டப்பட்டே கிடந்த கோயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அக்டேபார் 19ந்தேதி, ஏழு ஊர் கிராம மக்கள் இணைந்து காளியம்மனுக்கு அலங்காரம் செய்து கொலுவைத்து தங்கள் கிராமங்களில் இருந்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த திருவிழா தங்களுக்கு மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 50க்கும் அதிகமான போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலிஸ் பாதுகாப்பு இருந்ததால் எந்த தரப்பினரும் பிரச்சனை செய்யாமல் திருவிழா இன்றும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT