
தமிழக கோயில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் அடுத்த ஆறு வாரங்களுக்கு எடுக்கக் கூடாது என்று தமிழக அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோயில்களில் காணிக்கையாக வழங்கப்படும் நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யும் முயற்சியை தமிழக அறநிலையத்துறை எடுக்க முயன்றது. ஆனால் இந்த முயற்சிக்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். காணிக்கையாக வழங்கும் நகைகளை யாருடைய அனுமதியின் படி அரசு தங்க கட்டிகளாக மாற்ற நினைக்கிறது, இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சில வாரங்களுக்கு முன்பு விசாரித்த உயர்நீதிமன்றம் அறநிலையத்துறையின் இந்த முயற்சிக்கு தடை விதித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக அடுத்த ஆறு வாரத்துக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.