Advertisment

கரோனா அடைப்பைப் பயன்படுத்தி கோயில் நகை கொள்ளை... ஊழியர்களே கொள்ளையர்களான கொடுமை!

Temple jewelery robbery using corona block ... Employees are robbers cruel!

ஆலயத்தையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்கிற வேலியே பயிரை மேய்ந்திருக்கிறது.

Advertisment

நெல்லை மாவட்டத்தின் பாவங்களை நாசம் செய்யும் பரிகாரதலம் பாபநாசம். தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற தாமிரபரணி தரையிறங்கி முதன் முதலாகப் பாய்கிற முகத்துவாரம் பாபநாசம். அந்நதி ஓடுகிற கரையோரம் சிவபெருமான் வீற்றிருந்து, அருட்பாலிக்கிற பாபநாச சுவாமி கோவிலிருக்கிறது. பாவங்களையும், கர்மவினைகளையும் போக்குவதற்காக ஆற்றில் குளித்துவிட்டு அருகிலுள்ள பாபநாச சிவனை வழிபடுவது பக்தர்களின் மரபு.

Advertisment

ஆனால் காலப் போக்கில் பாபநாசம், மறைந்த பிதுர்களுக்கான தர்ப்பணம் செய்துவிட்டு ஆலய வழிபாடு நடக்கிற அளவுக்கு மாறியதன் விளைவு அன்றாடம் பரிகார யாகம் நடத்தும் பொருட்டு பக்தர்கள் திரளும் நிலை என்றாகிவிட்டது. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ பரிகாரத்தலம் என்பதால், ஆதிகாலத்திலேயே ஆண்ட மன்னர்கள் தங்கமும், வைரங்களையும் ஆலயத்திற்கு தானமாகவே வழங்கியிருக்கிறார்கள்.ஆலயப் பெட்டகங்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவைகளின் மதிப்பு அளவிட முடியாதவை என்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த மார்ச் 25 முதல் ஆக 31 வரை கரோனாத் தொற்று காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட்டு ஆலயங்கள் உட்பட அனைத்தும் மூடப்பட்டன. ஆலயத்திற்கு பக்தர்கள் வரத்தடை என்பதால் அங்கு ஆலய உழியர்களைத் தவிர வேறு ஆட்கள் நடமாட்டமில்லை 7 மாதங்கள் பூட்டப்பட்ட நிலையில் லாக்டவுண் வாய்ப்பைப் பயன்படுத்திய பாபநாசம் கோவில் ஊழியர், பூசாரி இருவரும் சேர்ந்து ஆலய நகைகளைத் திருடி நாகர்கோவிலில் விற்றுள்ளனர்.

பெட்டகத்தின் சாவி கோயில் செயல் அலுவலர் ஜெகநாதனிடம் தானிருப்பது வழக்கம். பெட்டகம் உடைக்கபட்டதா,கள்ளச் சாவி போடப்பட்டதா என்ற விபரம் தெரியவில்லை அறிவிக்கப்படவுமில்லை. ஆனால் செயல் அலுவலர் ஜெகநாதன் நகைளைச் சரிபார்க்கையில் நகைகள் களவு போனது தெரியவர, அவர் வி.கே.புரம் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீசார் ஆலய ஊழியர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். களவு போனது 25 பவுன் நகை என்று சொல்லப்பட்டாலும் அதனையும் தாண்டிய அளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. முறையான விசாரணை நடத்தினால் கொள்ளைபோன நகையின் அளவு தெரியவரும். பலர் சிக்குவார்கள். துணை ஆணையர் அளவிலான அதிகாரிகள், நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் சரிபார்த்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

temple Theft papanasam nellai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe