ராமேஸ்வரம், திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி போன்ற கடலோரப் பகுதிகளில், மக்கள் கடலில் மூழ்கி பலியாவதைத் தடுக்க திட்டம் ஒன்றை வகுக்கும்படி தமிழக அரசுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Temple issue - highcourt order

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தமிழகத்தில் நீர் நிலைகளில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் 22 மாவட்டங்களின் ஆட்சியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீரில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், பலியானவர்களின் விவரங்கள் குறித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இதில், ஈரோடு மாவட்டத்தில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டில் 220 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல, சென்னை உள்பட 13 மாவட்டங்களில் 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், 986 பேர் வரை பலியாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் இருவர் கடலில் மூழ்கி பலியான விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பொதுமக்கள் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர். மேலும், ராமேஸ்வரம் திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோரப் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கடலில் மூழ்கி உயிர் இழப்பதைத் தடுக்க, தமிழக அரசும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து கூட்டாக திட்டம் ஒன்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர். மேலும், மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் அறிக்கை தாக்கல் செய்த 22 மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள 15 மாவட்ட ஆட்சியர்களும் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.