Temple Inscription Practice for College Students

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்கல்வெட்டுப்படிஎடுத்தல் மற்றும் கல்வெட்டு அமைப்பியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

Advertisment

திருவாடானை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் தமிழ்த்துறை முதுகலை மற்றும் இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு ஒரு நாள் கல்வெட்டுப்பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. இதில் காலையில் அருள்மிகுஆதிரத்தினேசுவரர்கோயிலுக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டு சிற்பக் கலைத்திறன், கோயில் கட்டடக் கலை, கல்வெட்டுகள் ஆகியவை விளக்கப்பெற்றன, இதில் கல்வெட்டுகளின் அவசியம் அவற்றின் அமைப்பு, தொடக்கம், முடிவு, கல்வெட்டுகளின் இன்றியமையாமை, கல்வெட்டுகளைப் படி எடுக்கும் முறைபடிக்கும் முறை, கல்வெட்டுகளைப்பாதுகாக்கும் முறைஆகியவற்றை அறிந்து கொண்டனர்.

Advertisment

கல்வெட்டு படி எடுத்தல் பயிற்சி;பொதுவாகக்கல்வெட்டுகளைபடியெடுக்கும் முறையை 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதியில் நம்மை ஆட்சி செய்தபிரிட்டிஷ்காரர்கள்நமது கோவில்களில் எழுதப்பட்டுள்ள வரலாற்றையும் அது தொடர்பான செய்திகளையும் அறிந்துகொள்வதற்காகக்கல்வெட்டு படி எடுத்துக் கொள்ளும் முறையை உருவாக்கினர். இதன் வழிகல்வெட்டுகளை படி எடுத்து வந்து பொறுமையாக எப்போது வேண்டுமானாலும் வாசிக்கும் முறையைக் கையாண்டனர். மேலும் கோவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள கல்வெட்டுகளை படி எடுத்துக் கொண்டு வருவதன் வழி அதன் நகலை எப்போதும் பயன்படுத்த முடிந்ததாக இவை அமைந்தன.

கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளைநன்றாகதண்ணீர்வைத்துக்கழுவிதுடைத்த பின்னர் அப்பகுதியில் படியெடுக்கப்பயன்படுத்தப்படும் வெள்ளை நிறத் தாளை வைத்து இதற்காக பயன்படுத்தப்படும் விலங்கு மயிர்களால் ஆன(பிரஸ்)தோய்ப்பான்களைக்கொண்டு ஓங்கி அடித்து எழுத்துக்களின் இடுக்குகளில் தாள்கள் போய்ச் சேருமாறு செய்து கொண்டு இதற்காகபயன்படுத்தப்படும் ஒருவகை மையினை விலங்குத் தோல்களாலான தேய்ப்பானைக் கொண்டு வெள்ளைத் தாளில் ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது மையானது எழுத்து உள்ள இடுக்குகளில் செல்லாமல் மேற்பகுதியில் மட்டும் ஒட்டி இருக்கும். அப்போது ஒவ்வொரு எழுத்துக்களும்தனித்தனியாகத்தெரியும். சிறிதுநேரத்திற்குப்பிறகு காய விட்டு இத்தாளை மெதுவாக எடுத்து விடலாம். இவையே கல்வெட்டு படி எடுத்தல் என வழங்கப்படுகிறது.

Advertisment

இவ்வாறான கல்வெட்டுகள் குறித்த, படி எடுத்தல் பயிற்சியை ஆதி இரத்தினேஸ்வரர் கோவிலிலும் கல்வெட்டு தொடர்பான கருத்துரையை திருவாடானை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறையிலும், சிவகங்கை தொல்நடைக்குழுநிறுவனர்புலவர் கா. காளிராசா வழங்கினார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மு.பழனியப்பன், பேராசிரியர்கள் மணிமேகலை, அழகுராஜா ஆகியோர் உடன் இருந்தனர். இப்பயிற்சி மாணவர்களுக்குக் கல்வெட்டுகளைபாதுகாத்தலின் அவசியத்தை எடுத்துரைத்தது.