''11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களைப் பக்தர்களிடம் விடுங்கள். தமிழகக் கோவில்களை விடுவிக்கும் நேரமிது'' எனஜக்கிவாசுதேவ்கருத்து ஒன்றைடிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தைதான் முழுமையாக ஏற்பதாகப் பதிவிட்டு, ஜக்கிவாசுதேவுக்கு நடிகர்சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார். "பூஜை நடைபெறாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பல கோவில்கள்இருப்பதுவருத்தமளிக்கிறது. ஜக்கிவாசுதேவ்கருத்தை முழுமையாக ஏற்கிறேன். கோவில்களைப் பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்"எனநடிகர் சந்தானம் ட்வீட்செய்துள்ளார்.