Advertisment

ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடிப் படையல் விழா! 

temple festival peoples mans in madurai

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள வீரசூடாமணிப்பட்டி, சுந்தர்ராஜபுரம், கச்சிராயன்பட்டி ஆகிய மூன்று கிராமங்களுக்கு சொந்தமான ஐந்துவிழி சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற ஆடி படையல் விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் சுவாமிக்கு நேர்த்திக் கடனாக விடப்பட்ட 90 கிடாய்கள் மற்றும் 800 சேவல்களை கோயில் அருகே பலியிட்டனர்.

Advertisment

ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டு, பலியிடப்பட்ட கிடாமற்றும் சேவல்களை சுத்தம் செய்து, அடுப்பில் மண்கலையத்தில் உப்பு, வேப்பிலைகளைப் போட்டு சமைத்தனர். பின்னர், அந்த அசைவ உணவை கோயில் முன்பு சுவாமிக்கு படையலிட்டு, சிறப்புப் பூஜை செய்து வழிப்பட்டனர்.

Advertisment

முன்னதாக, படையல் நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பக்கத்து ஊரில் இருந்து வரவழைக்கப்பட்ட இஸ்லாமியர் சிறப்பு தொழுகை செய்து, சர்க்கரை கொடுத்து வழிபட்டார்கள்.

Festival temple madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe