Advertisment

குளமங்கலம் கோயில் குடமுழுக்கு; லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள் (படங்கள்)

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை நடந்தது. செண்டை மேளம் முழங்க, யானையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் மெய்யநாதன் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்.

Advertisment

யாகசாலையில் வைத்து பல நாட்களாக பூஜைகள் செய்யப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயில் கோபுரம் பிரமாண்ட குதிரை சிலைக்கு நன்னீர் கொண்டு செல்லப்பட்டு ஊற்றப்பட்ட போது 20 க்கும் மேற்பட்ட கருடன்கள் வட்டமிட்டது. இந்தக்குடமுழுக்கைக்காண பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். அதனால் ஆங்காங்கே தண்ணீர் தெளிக்க ஸ்பிரிங்லர்கள் அமைக்கப்பட்டிருந்தது. அதேபோல ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment
Pudukottai temple festival
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe