ADVERTISEMENT

மக்களை மட்டுமா? கோவில் திருவிழாக்களையும் முடக்கிய கரோனா

01:00 AM Mar 26, 2020 | rajavel

ADVERTISEMENT

கரோனாவின் படையெடுப்பால் மக்கள் மட்டுமல்ல அரசாங்கமே ஆடிப்போய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசும் இரவு பகலாகப் போராடி வருகிறது. நாடு இதுவரையும் கண்டிராத தொடா் ஊரடங்கில் உ்ள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனா். மக்களைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கமும் மருத்துவத் துறையும் தினம் தினம் திட்டத்தை வகுக்கிறார்கள்.

ADVERTISEMENT

இதற்கு மேல் பெரும்பாலானோர் நம்பிக்கை வைத்துள்ள கடவுள்களைக் கூட கரோனா அச்சத்தால் பார்க்க முடியாத நிலையில் உள்ளனா். இதனால் மக்களோடு கடவுள்களையும் முடங்கியிருக்கிறது கரோனா. இந்து கடவுள்களில் பெரும்பாலான கோவில்களில் ஆண்டுதோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் தான் ஊா் மக்கள் சோ்ந்து திருவிழா எடு்ப்பது வழக்கம். தற்போது கரோனா அச்சத்தால் பிரசித்திப் பெற்ற பல கோவில்களில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது.






இதில் குமரி மாவட்டத்தில் பல லட்சங்களை செலவு செய்து இந்த மாதம் நடக்க இருந்த கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. இங்கு முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளைக் கையில் ஏந்தி தூக்க நோ்சை வழிப்பாடு பிரதானமானதாகும். இதைப் பார்ப்பதற்கு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து லட்ச கணக்கான மக்கள் கூடுவார்கள். இதனால் இந்த கோவிலின் திருவிழாவை நிறுத்த மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டதால் கோவில் நிர்வாகம் திருவிழாவை நிறுத்தியுள்ளது.

இதேபோல் இட்டக வேலி முடிப்புரை நீலகேசி அம்மன் கோவில் திருவிழாவும் பெரும் விமா்சையாக நடத்தப்படும். இங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இங்கேயும் திருவிழாவை கோவில் நிறுத்தியுள்ளது. அதே போல் கிறிஸ்தவ திருவிழாவான ஆறுகாணி குருசுமலை திருபயணம் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தால் இணைந்து நடத்தபடுவது. மலை உச்சியில் இருக்கும் இந்த ஆலயத்தில் லட்ச கணக்கான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழாவும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மாதம் நடை பெறும் ஆறுகாணி காளிமலை கோவில் திருவிழாவும் நடக்குமா? என்ற கேள்விக் குறியில் பக்தா்கள் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் ஓவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊா் கோவில் திருவிழாக்களிலும் ஏராளமானோர் கூடுவார்கள் என்பதால் குமரி மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஊா் கோவில் திருவிழாக்களையும் ஊா்மக்கள் நிறுத்தியுள்ளனா். அந்தளவுக்கு கரோனாவின் தக்கம் எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT