Advertisment

நலவாழ்வு முகாமிற்கு புறப்பட்ட கோவில் யானைகள்!

Temple elephants leave for welfare camp!

கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நாளை முதல் 48 நாட்கள் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. மேலும் முகாமிற்கு யானைகளை கொண்டு வருவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமிற்குதற்போது யானைகள் படையெடுத்து வருகின்றன.

Advertisment

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் யானை ராமலட்சுமி யானைகள் நலவாழ்வு முகாமிற்கு புறப்பட்டது.அதேபோல் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆகிய இரு யானைகளும் முகாமிற்கு புறப்பட்டன.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி, திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா,திருவானைக்கால் கோயில் யானை அகிலா, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் யானை லட்சுமி ஆகியயானைகள் நலவாழ்வு முகாமிற்கு புறப்பட்டுள்ளன.

Advertisment

camps elephant
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe