தீ விபத்தில் சிக்கிய கோவில் யானை உயிரிழப்பு

Temple elephant lose their live in fire accident

குன்றக்குடியில் தீ விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த கோவில் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் உள்ள சண்முக பெருமாள் கோவிலில் சுப்புலட்சுமி என்ற யானை இருந்தது. இந்நிலையில் யானை மண்டபத்தில் திடீரென ஏற்பட்ட தீபத்தில் யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது.படுகாயம் அடைந்த யானையை மீட்டு கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்துசிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்றுநள்ளிரவு சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியது.

யானையின் உயிரிழப்புக்கு குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பக்தர்கள் மற்றும் பகுதி மக்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோவில் யானை மறைவையொட்டி துக்கம் அனுசரிப்பதற்காக குன்றக்குடி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

elephant kundrakudi temple
இதையும் படியுங்கள்
Subscribe