குழந்தை திருமணம் செய்த வழக்கில் கோயில் தீட்சிதர்கள் கைது! 

Temple dikshitars arrested in case of child marriage!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வடக்கு சன்னதியைச் சேர்ந்த தில்லை நாகரத்தினம் (வயது 60). இவரது மகன் பத்ரிசன் (வயது 20). இவர்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2021- ஆம் ஆண்டு ஜனவரி 25- ஆம் தேதி கீழ வீதியில் பத்ரிசனுக்கும், 13 வயது சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து வந்த தகவலின் பெயரில் கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையொட்டி, திருமண ஏற்பாடுகளை செய்த மணமகனின் தந்தை தில்லை நாகரத்தினம் மற்றும் மணமகன் பத்ரிசன் ஆகிய இருவரையும் இன்று (08/10/2022) மாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதேபோல் சிறுமியின் தாய், தந்தை மற்றும் மணமகனின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதே நாளில் அந்த திருமண மண்டபத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு திருமணம் செய்யப்பட்டதாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chidambaram temple
இதையும் படியுங்கள்
Subscribe