TEMPLE Dikshitar arrested for marrying a girl!

மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

கடந்த 2021- ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம், சிதம்பரம் கோயிலில் பணிபுரிந்து வரும் தீட்சிதர் கணபதி என்பவர் தனது 15 வயது மகளுக்கு அதே கோயிலில் பணிபுரிந்து வரும் 24 வயதான தீட்சிதர் பசுபதி என்பவருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தனர்.

Advertisment

இதன் அடிப்படையில், தீட்சிதர் மற்றும் சிறுமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். சிறுமி தெரிவித்த தகவலை அடுத்து, தீட்சிதர் மற்றும் மாணவியின் தந்தை ஆகிய இரு வரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.