/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/KottureshwaraTemple.jpg)
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமரந்து வந்த பெண்ணை கோயில் காளை ஒன்று கொம்பால் தூக்கி வீசிய காட்சி வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கோட்டூஸ்வரா கோவிலைச் சேர்ந்த காளை ஒன்று கயிறை அறுத்துக்கொண்டு கோயிலை விட்டு வெளியே சுற்றியது. அப்போது சாலையில் சென்றவர்களையெல்லாம் முரட்டுத்தனமாக முட்டித் தள்ளியது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்திருந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த காளை சாலையில் சென்றுகொண்டிருந்தவர்களை விரட்டியது. சிலரை முட்டியது. அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த பெண் ஒருவரை அந்த காளை முட்டி தள்ளியதில் அவர் தலைகீழாக கவிழ்ந்து விழுந்து காயம் அடைந்தார்.
Follow Us