Published on 29/01/2021 | Edited on 29/01/2021

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில், ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில், பொதுமக்கள் வழிபடும் வகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குக் கோவில் கட்டும் பணி நடந்தது.
இந்த கோவிலை தரிசிக்க பரமக்குடி, சோழவந்தான், வாடிப்பட்டி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து பாதயாத்திரையாக அ.தி.மு.க நிர்வாகிகள் நடந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டினை செய்து வரும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்து வருகிறார். இந்த கோவிலை (30/01/2021) நாளை காலை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர். இதில் துணை ஒருங்கிணைப்பாளர்களும், அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்