தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. தெலுங்கு ’பிக்பாஸ் 2’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், பிரபல தெலுங்கு நடிகையுமான சஞ்சனா. இவருக்கு வயது 27. இவர் தெலுங்கானா மாநில பிரபல அரசியல்வாதியின் மகன் மீது பாலியல் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு நடிகை சஞ்சனா சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இரவில் சென்றதாகவும், அப்போது அந்த ஓட்டலுக்கு தெலுங்கானா முன்னாள் எம்எல்ஏ நந்தேஷ்வர் கவுடு என்பவரின் மகன் ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் சஞ்சனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

actress

actress

அப்போது சஞ்சனாவை சந்தித்த ஆஷிஷ் அவரிடம் தாக்காத முறையில் நடந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிவந்த நடிகை சஞ்சனா " கையை பிடித்து இழுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை மாடியில் இருந்து கீழே தள்ள முயற்சித்தாகவும் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும். அது சம்மந்தப்பட்ட சிசிடிவி காட்சிக்கு அந்த ஓட்டல் சாட்சி என கூறினார்.இதனையடுத்து ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்களும் திடீரென தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பின்னர் மந்தாப்பூர் போலீசார், ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.