பாடி வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சுகன்யா (37) நேற்று மாலை சுகன்யா முகப்பேரில் உள்ள தனியார் பள்ளிக்கு சென்று, அங்கு பயிலும் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், திடீரென சுகன்யாவை வழிமறித்து, அவரது கழுத்தில் கிடந்த 6 சவரன் செயினை பறித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அதற்குள் மர்ம நபர்கள், செயினுடன் தப்பி சென்றனர். புகாரின் அடிப்படையில் கொரட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.