Skip to main content

“யார பாத்து குடிகாரன்னு சொல்லுற... மது அருந்துவோர்னு சொல்லனும்”- கடைக்காரரிடம் மல்லுக்கட்டிய ஆசாமி

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

"Tell me who is a drunkard." Let's say those who drink alcohol” - Asami who wrestled with the shopkeeper

 

குடிகாரன் எனக்கூறிய கடைக்காரரை பார்த்து மது அருந்துவோர் எனக் கூற வேண்டும் என அதட்டிப்  பேசும் நபர் வீடியோ பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

கடைகாரக்கு எதோ வாங்கப் போனவரை கடைக்காரட் குடிகாரர் என்று கூறியதை கேட்டு மது அருந்திய நபர் சண்டையிட பக்கத்தில் இருந்த நபர் அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த பதிவில் அந்த போதை ஆசாமி, “ யாருயா குடிகாரன். நீ வாங்கி கொடுத்தியா எனக்கு. மது அருந்துவோர் ( மாரில் தட்டிக்கொள்கிறார்) எங்கள குடிகாரன்னு கேவலப்படுத்துறியா. மது அருந்துவோர்னு சொல்லுங்க. மது அருந்துவோர். வீட்லயும் மரியாத இல்ல. ரோட்லயும் மரியாத இல்ல. இந்த கவர்மெண்ட காப்பாத்துறது நாங்கயா” என ஆவேசமாக பேசுகிறார். இதனைத் தொடந்து இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகிற சூழலில் குடிப்பவர்களை மது பிரியர்கள், மது அருந்துவோர் என மரியாதையாக நடத்த வேண்டும் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கறி விருந்து... மது போதை...’ - தூக்கத்தில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

man passed away while sleeping in Madurai

 

மதுரை – வீரபாண்டிய நகர் – கருப்பாயூரணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்  வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மூத்த மகன் சமயமுத்து (வயது 33), தன் மனைவியின் ஊரான திருச்சுழி வட்டம் – நெடுகனேந்தல்  கிராமத்துக்கு, மாமனார் கருப்பையா கட்டிய புது வீடு பால் காய்ச்சும்  நிகழ்ச்சிக்கு சென்றார். அன்றைய தினம் அங்கு தங்கிய சமயமுத்து, மறுநாள்  நடந்த கறி விருந்தில் கலந்துகொண்டு சாப்பிட்டிருக்கிறார். 

 

அன்றிரவு மது போதையில் படுத்து உறங்கியவருக்கு, அதிகாலை 1-50 மணிக்கெல்லாம் நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதித்த பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் சமயமுத்துவை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், சமயமுத்து இறந்துவிட்டதை உறுதி செய்திருக்கிறார். சமயமுத்து இறப்பு குறித்து தந்தை தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில் திருச்சுழி காவல்நிலையம் வழக்குப் பதிவு செய்துள்ளது. 

 

 

Next Story

“மது ஆறு அல்ல; புதுச்சேரி மது கடலாக மாறிவிடும்..” - முன்னாள் முதல்வர்  நாராயணசாமி

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

Former Chief Minister  Narayanasamy condemn for Alcohol

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே  ஏராளமான மதுபானக் கடைகள் உள்ள நிலையில், புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சாமிப்பிள்ளை தோட்டத்தில் காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபானக் கடை அமைக்க புதுச்சேரி அரசும், கலால் துறையும் அனுமதி அளித்துள்ளது. பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான இக்கட்டடம் உள்ள பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். புதிய மதுபானக் கடை திறக்க கட்டுமான பணிகள் முடிந்து கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

புதிய மதுக்கடை வரும் பகுதியில் பிரசித்தி பெற்ற கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் நிறைய குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு ஒன்றை அமைத்து, அந்த மதுபானக் கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில், மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காமராஜர் மணிமண்டபம் அருகே ஒன்று கூடி புதிய மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த லெனின்.துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது.செல்வம், தமிழர் களம் மாநில அமைப்பாளர் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் மதுபானக்கடை கொண்டுவரக்கூடாது என்று வலியுறுத்தியும், மதுபானக்கடைக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் முழக்கங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர். அப்போது ஒரு கட்டத்தில் அப்பகுதி பெண்கள் மதுக்கடை திறக்க உள்ள பகுதியை நோக்கி சென்றபோது போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி அளிக்கப் போவதாக தெரிகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். ஏற்கனவே ஓடும் மதுபானம் ஆறு., இனி மது கடலாக மாறிவிடும். பெண்களின் போராட்டத்தின் மூலம்தான் மதுக் கடைகளை அகற்ற முடியும். அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.