ADVERTISEMENT

"நான் தமிழில் பேசுகிறேன் புரிகிறதா என்று சொல்லுங்கள்"- மக்களவையில் அதிரடி காட்டிய கனிமொழி எம்.பி.!

08:05 PM Dec 09, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

மத்திய அரசின் கோப்புகள் இந்தியில் இருப்பது அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியாது என்பதால், ஆங்கிலம் அல்லது மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

மக்களவையில் பேசிய கனிமொழி எம்.பி., "இந்தி மொழியில் இருந்த 'ஆத்மநிர்பார் பாரத் திட்டம்' குறித்து படிக்கும் போது திணறிய நிலையில், ஓகே இனிமேல் நான் தமிழில் பேசுகிறேன் புரிகிறதா என்று சொல்லுங்கள் எனக் கேள்வி எழுப்பியவர், மாநில மொழிகளில் திட்டங்களின் பெயர் இருந்தால் அனைவராலும் உச்சரிக்க முடியும். ஆங்கிலம் அல்லது மாநில மொழிகளில் கோப்புகள் இருக்க வேண்டும்" என்றார்.

இதனால் மக்களவை சிறிது நேரம் உறுப்பினர்களின் சிரிப்பலையில் ஆழ்ந்தது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT