ops

மன்னார்குடியில் வரும் 1 ம் தேதி துணைமுதல்வர் ஒ,பி,எஸ்,தலைமையில் அதிமுகவினர் காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். அதன் மறுநாளே 2 ம் தேதி நீடாமங்கலத்தில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இயலாமையை கண்டித்து டி,டி,வி, தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

Advertisment

இவ்விரு நிகழ்வுகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசியல் வாதிகளை மட்டுமின்றி பொதுமக்களையும் திரும்பிபார்க்க வைத்திருக்கிறது.

Advertisment

கடந்த மாதம் 5 தேதி டி,டி,வி தினகரன் மன்னார்குடி தேரடியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவை பொதுக்கூட்டமாக நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய தினகரன், "எங்க வீட்டு விஷேசங்களில் சாம்பார் வாளித்தூக்கியவர் இன்றைக்கு அமைச்சர்". என அமைச்சர் காமராஜை சாடினார். அதற்கு பதிலடிக்கொடுக்கும் விதமாக மறு வாரமே பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டார் அமைச்சர் காமராஜ், தொடர் மழையினால் கூட்டம் நடத்தமுடியாமல் தள்ளிப்போனது. அந்த கோபத்துடன் வரும் செப் 1 ம் தேதி, தினகரன் கூட்டம் நடத்திய அதே தேரடியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான வேலைகள் கனஜோராக நடந்துவருகிறது.

பேனர்கள், நுழைவு வளைவுகள் அமைப்பதற்கு தார்சாலைகளை டிர்லரால் உடைத்து அமைக்கின்றனர். மன்னார்குடி நகரம் முழுவதும் எங்கு திரும்பினாலும் பேனர்கள் தோரன வளைவுகளால் ஆக்கிரிமித்துள்ளன. கும்பகோணம், மன்னார்குடி சாலையை இடைமறித்து வளைவுகள் அமைத்திருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Advertisment

அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், " ஒரு காலத்துல திவாகரனை "பாஸ்" னு அழைக்கவே பயப்படுவோம், அவங்கள மீறி மன்னார்குடியில் எதுவும் நடக்காதுங்கிற நிலமையிருந்துச்சி, ஆனா இன்று நிலமை தலைக்கீழா மாறிடுச்சி, அந்த பாஸே அமைச்சரால பீசாகிட்டார். தினகரனுக்கு மன்னார்குடியில் செல்வாக்கே கிடையாது அவருவந்து எங்க அமைச்சர பேசிட்டார், நாங்க சும்மா இருந்துடுவோமா, அவங்க கூட்டிய கூட்டத்தைவிட ஒரு மடங்கு அதிகமா கூட்டி தினகரனின் பொட்டிய அடக்குவது தான் இந்த பொதுக்கூட்டத்தின் நோக்கம்." என்றார் குதுகலத்துடன்.

ஒ.பி.எஸ் தலைமையிலான பொதுக்கூட்டத்தில் என்னப்பேசுகிறார்கள் என்பதற்கு பதிலடி கொடுக்கவே நீடாமங்கலத்தில் அவசரமாக ஆர்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறார் தினகரன். இந்த தகவல் அமைச்சருக்கு தெரியவந்து, காவல்துறை மூலமாக ஆர்பாட்டத்தை 31 ம் தேதியே நடத்திட உத்தரவிட சொல்லியிருக்கிறார், தினகரன் அணியினரோ, நாங்க முறையாக அனுமதி வாங்கிட்டோம், எங்களால மாற்றிக்க முடியாது, வேனும்னா அமைச்சர் கூட்டத்த மாத்திக்க சொல்லுங்க, நீங்க தடுத்தாலும் தடைகளை மீறி ஆர்பாட்டம் நடத்துவோம் எனகராராக கூறிவிட்டு, மேடை அமைக்கு பணிகளை துவங்கிவிட்டனர்.

தினகரன் நடத்தும் ஆர்பாட்டத்தில் டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் காவிரி எஸ்.ரெங்கநாதன், தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டவர்களையும் அழைத்துள்ளனர். அவர்களும் வருவதாக கூறிவிட்டனர்.

அதே போல் ஒ,பி,எஸ் கலந்துகொள்ளும் காவிரி சாதனை விளக்க கூட்டத்திலும் மேலே உள்ள விவசாய சங்கத்தினரை அழைத்துள்ளனர்.

எங்கு செல்வது, என்ன பேசுவது, உண்மையிலேயே காவிரிக்கான போராட்டம், கூட்டம் தானா, இவர்களின் வாஞ்சையை தீர்த்துக்கொள்ளுவதற்காக நடத்துகிறார்களா என்பது புரியாமல் புலம்புகிறார்கள் விவசாய சங்கத்தினர்.