தமிழக மாநில முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து இந்திய குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவருக்கு, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled_20.jpg)
இந்நிலையில் தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 8- ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி செல்லும் தமிழிசை மத்திய அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us