Advertisment

மரணத்திற்கு மரியாதை தந்த வட்டாட்சியர்

கோவை பேரூர் சரக வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், இன்று மாலை 4 மணியளவில்தன் அலுவலகத்தில் இருந்து காரில் வெளியே வந்தார். தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பேரூர் காவல்துறை செக்போஸ்ட் முன்பு ஐம்பது வயது கொண்ட ஒரு பெண்மணியும், அவரது கணவரும் அங்கு நின்று அழுது கொண்டிருந்தனர்.

Advertisment

66

அவர்களிடம் சென்று என்னவென்று விசாரித்தார் வட்டாட்சியர்.அந்த பெண்மணியோ, எனது தாயார் கோவை ராஜவீதியில் உள்ள வீட்டில் தற்போது இறந்துவிட்டார். இருசக்கர வாகனத்தில் சென்ற எங்களை இங்குள்ள போலீசார் அனுமதித்து விட்டனர்.ஆனால் சிட்டிக்குள் இருக்கும் போலீசார் எங்களையும், இரு சக்கர வாகனத்தையும் அனுமதிக்க மறுப்பதாக சொல்லி அழுதார்

Advertisment

. இதைக் கேட்ட வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், தன் ஜீப்பில் அவர்கள் இருவரையும் ஏற்றி, ராஜவீதியில் உள்ள அவர்களது வீட்டில் விட்டு விட்டு வருமாறு தன் ஒட்டுநரிடம் சொல்லி விட்டு தனது வாகனம் வரும் வரை ரோட்டிலேயே நின்று கொண்டிருந்தார்.மரணத்திற்கு மரியாதை தந்த மனிதர் என்கிற பெயர் வாங்கி, பொதுமக்களிடையே பேசப்படுகிறார் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன்.

Coimbatore help Tehsildar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe