Advertisment

இருசக்கர வாகனத்தை திருட முயன்ற வடமாநில வாலிபர்

A teenager who tried to steal a two-wheeler!

Advertisment

கரூர் மாவட்டம், பள்ளபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 50). இவர் புன்னம் சத்திரத்தில் இருந்து பாலமலை செல்லும் பிரிவு சாலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன் நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் கையில் இருந்த சாவியை கொண்டு ரவியின் மோட்டார் சைக்கிளை திருட முயன்றார்.

இதைக்கண்ட ரவி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தண்ணீர் பந்தல்பாளையத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வந்த வட மாநில இளைஞர் நீரன் (27) என்பதும், அவர் போதையில், மோட்டார் சைக்கிளை எடுத்து செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவன உரிமையாளரிடம் வட மாநில வாலிபரை ஒப்படைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

karur police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe