சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கவுந்தப்பாடி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பவானி சாலை, சுண்ணாம்பு சூளை எதிரில் உள்ள மயான பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு, சந்தேகத்துக்கிட்டமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், ஈரோடு, நாடார்மேடு, கெட்டிமுத்து தோட்டம் பகுதியைச் சேர்ந்த கிருத்திக் (22) என்பது தெரியவந்தது. மேலும், அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 9 மது பாட்டில்கள் மற்றும் மது விற்ற பணம் ரூ. 5,100 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்