அகஸ்தீஸ்வரத்தில்தனியாகச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை ஒற்றை ஆளாக அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஒருபெண்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைசேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்திருந்தார். அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு அருகில் பழக்கடை வைத்திருக்கும் திருமணமான நபர் ஒருவர் அந்த பெண்ணுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

The teenager who single-handedly beat up a teenager who had sexually assaulted her

அப்பொழுது அவனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்த அந்த பெண் ஆசை வாரத்தை கூறி வா என்று வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு குடோன் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வாலிபரும் அந்த பெண்ணைபின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர்தான் தெரிந்தது அடி உதை விழப்போகிறது என்று.

Advertisment

தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை அடித்து நொறுக்க தொடங்கினார் அந்தப் பெண். அதுமட்டுமல்லாமல் அந்த வாலிபரை எச்சரித்து திட்டியபடியே அடிக்க வீடியோவும் எடுக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத அந்த நபர் கூரையை பிய்த்துக்கொண்டு வெளியே ஓட முயன்றார். ஆனாலும் விரட்டி பிடித்த அந்த பெண், என்கிட்ட அடி வாங்கிறியாபோலீஸ் கிட்ட அடி வாங்கிகிறியா.நான் ஒரு பத்து அடிதான் அடிப்பேன், நேத்துதானே உன்னோட பெண்ணுக்கு சடங்கு முடிஞ்சுச்சு, என்னோட கால்ல எல்லாம் நீ விழ வேண்டாம்.அமைதியா அடிவாங்கு,தயவுசெய்து அமைதியா அடி வாங்கு என திட்டியபடி அடித்துஇதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தனக்கு சாலையில் பாலியல் அத்துமீறலில்ஈடுபட முயன்ற காமபேர்வழிக்குபாடம் புகட்ட இளம்பெண் ஒருவர் சரமாரியாக அடித்து, அதனை வீடியோவாக பதிவுசெய்து வெளியிட்ட துணிச்சல் அனைவரின் வரவேற்பையும் பெற்று வருகிறது.