Advertisment

இளைஞரின் விபரீத முடிவு; தந்தைக்கு போன் காலில் காத்திருந்த அதிர்ச்சி!

Teenager lost their life

ஈரோடு, வில்லரசம்பட்டி, பணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ்(24). டிப்ளமோ படித்துள்ள இவர் தனக்குச் சரியான வேலை கிடைக்காததால் சோலார் பேணல் அமைக்கும் வேலை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை செல்வதாகத் தனது வீட்டாரிடம் கூறிச் சென்றவர் அங்கு கார் ஓட்டி வருவதாகவும் அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த 13ம் தேதி இரவு தனது தந்தை நடராஜனுக்கு (49) போன் செய்து தான் ஈரோடு மணிக்கூண்டு அருகில் இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை வீட்டிற்குக் கூட்டிச் செல்லுமாறும் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். அதற்கு, அவரது தந்தை, நீயே ஏதாவது வண்டி பிடித்து வா எனக் கூறினாராம். இதையடுத்து, நேற்று முன்தினம் காலை நடராஜன் பிரகாஷ்ராஜின் செல்போனுக்கு அழைத்த போது அது சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

Advertisment

தொடர்ந்து நேற்று காலையில் பிரகாஷ்ராஜின் தம்பிக்கு செல்போன் மூலமாகத் தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ஈரோடு சுல்தான் பேட்டை பகுதியில் அறையில் தங்கி இருந்த பிரகாஷ் ராஜ் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரகாஷ்ராஜின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

youngster Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe