
லாரி கேபினில் இருந்து இறங்கும் போது தலையில் காயம்பட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மார்ட்டள்ளி, கொள்ளேகால் தாலுகா, ஒட்டரெதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (38). லாரி கிளீனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் சேத்தான்கொட்டாயை சேர்ந்த தனது தாய்மாமன் பலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான லாரியில் கிளீனர் வேலைக்கு சேர்ந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லுக்கு மாதேஸ் வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை இறக்காமல் நெல் மூட்டைகளுடன் தலையநல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு பலசுப்பிரமணி மற்றும் மாதேஷ் இருவரும் படுத்து தூங்கினர்.
நேற்று காலை 8 மணி அளவில் மாதேஷ் லாரியின் கேபினில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு மாதேஸ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)