r

இளம்பெண் ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்காரப் புகாரில் நான்கு நபர்கள் மீது வழக்குப் பதிந்து, சிறுவன் உட்பட மூவரை கைது செய்துள்ளது சிவகங்கை தாலுகா காவல் நிலையம். எனினும், வழக்கின் பின்னணி சுவாரசியமானது.

" சிவகங்கை கோட்டை முனியாண்டி கோவில் தெருவினை சேர்ந்தவர் 35 வயதுடைய விஜி. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று, அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் காஞ்சிரங்காலை சேர்ந்த சிறுவன் சிரஞ்சீவியின் ஷேர் ஆட்டோவில் ஏறி வீரவலசை கண்மாய்க்கு சென்றிருக்கின்றார்.

முன் கூட்டியே திட்டமிட்டப்படி அந்த சிறுவனின் சக நண்பர்களான தினேஷ், தனசேகர் மற்றும் சந்தோஷ் ஆகியோரும் அங்கிருக்க, அந்தப் பெண்மணியுடன் தனிமையில் இருந்திருக்கின்றனர். பேசியபடி அந்தப் பெண்ணிற்கு பணத்தை தராததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் நீண்டுள்ளது. அதன் பின் வீட்டில் இறக்கிவிடப்பட்ட விஜி திங்கட்கிழமையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பணம் வரவில்லையென்பதால், காக்கி ஒருவர் ஆலோசனையில், "தன்னைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக" புகார் அளித்துள்ளார். அதன் பின்னே, சந்தோஷ் தவிர மற்ற 3 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிரஞ்சீவி மட்டும் சிறுவன்." என்கின்றனர் சிவகங்கை தாலுகா காக்கிகள்.