Advertisment

இயற்கை விவசாயம் உழவர்களுக்கு பயிற்சி அளித்த தொழில்நுட்ப மேலாண்மை முகமை!

Technical Management Agency that trained organic farming farmers

நேற்று (20.07.2021) கடலூர் மாவட்டம் குமராட்சி ஒன்றியம் திருநாரையூர் குமராட்சி வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA), மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை மற்றும் சீரமைப்புத் திட்டம் ஆகியவற்றின் மூலம் இயற்கை விவசாயம் உழவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ரமேஷ்தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் S. அமிர்தராஜ், உதவி வேளாண்மை அலுவலர் K. குணச்சந்திரன், தொழில்நுட்ப மேலாளர் (ATMA) S. பாலசுப்பிரமணியன், உதவி தொழில்நுட்ப மேலாளர் (ATMA) K. தண்டபாணி, V. பிரகாஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.இந்தப் பயிற்சியில் செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் க. கண்ணதாசன், அமைப்பாளர் க. முருகன் ஆகியோர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து, இயற்கை இடு பொருட்களான பஞ்சகவியம், பூச்சிவிரட்டி தயாரிப்பு மற்றும் செய்முறை பயிற்சி அளித்தனர். இயற்கை விவசாயம் செய்யும் உழவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

Advertisment

Farmers Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe