/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/perambalur-std.jpg)
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தகவிதா(24) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும்,ஆத்தூரை சேர்ந்தவீரராகவன் என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீரராகவன் இறந்து போய்விட்டார். இதையடுத்து கவிதா கணவர் வீட்டைவிட்டு தனது பெற்றோருடன் பெரம்பலூரில் வசித்து வருகிறார். இதில் கவிதா உயிருடன் உள்ள நிலையில் அவரது கணவரின் உறவினர்கள் கவிதா இறந்துவிட்டதாகக்கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பெரம்பலூர் நகர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் பெண்ணின் பெயர் விலாசம் முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் 7-10-2020 தேதி இரவு அந்த பெண் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு ஆழ்ந்த வருத்ததுடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என அந்தப் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தபோஸ்டர் ஒட்டப்பட்ட தகவலை கவிதாவின்குடும்பத்தினர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போஸ்டரில் குறிப்பிட்ட பெண்ணுக்கும் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் உள்ள காட்டுக்கொட்டாய் சேர்ந்த தாய்மாமன் மகனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை,ஆறு மாதங்களுக்கு முன் அந்த பெண் பெரம்பலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வந்துவசித்து வரும் நிலையில், அவரது கணவரும் குடும்பத்தினரும் சொத்தில் பங்கு கேட்டு இவர் மறுமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மறுமணம் செய்து கொள்ள போகும் அந்த பெண்ணுக்கு சொத்தில் பங்கு கேட்டதால்ஆத்திரமடைந்த அவரது கணவரின் குடும்பத்தினர் இப்படிப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கவிதா பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மறைந்த கணவரின் வீட்டார் என்னை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு இதுபோன்று போஸ்டர் ஒட்டி இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், போஸ்டர்கள் ஒட்டப்பட்டபோது அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் அந்த நபர்கள் சிக்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)