Advertisment

''படிச்சுட்டுதான் சார் நாங்களும் ஸ்விகிக்கு வேலைக்கு வரோம்...'-போலீசாரால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் கண்ணீர் பேட்டி!

Tearful interview of the swiggy youth who was attacked by the police!

உணவு டெலிவரி செய்யும் ஸ்விகி ஊழியரை போலீசார் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து தாக்குதலுக்கு உள்ளான ஸ்விகி ஊழியர் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், ''எனது பெயர் மோகனசுந்தரம்சார்.. நான் ஸ்விகியில் வேலை செய்றேன் சார். நேற்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள் உணவு டெலிவெரி செய்வதற்காக ஃபன் மால் அருகே வந்து கொண்டிருந்த நேரத்தில், நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ் வந்தது. ஒரு பொண்ணும் பையனும் சென்றுகொண்டிருந்தனர். அப்பொழுது பஸ் அந்த பொண்ண இடிச்சுட்டு போனது. நான் சென்று பஸ்ஸ நிப்பாட்டுங்க அண்ணா, அந்த பொண்ண இடிச்சுட்டு நிக்காம போறீங்க என சத்தம் போட்டேன். அதற்கப்புறம் நிப்பாட்டுனாங்க. அதற்கப்புறம் அங்கிருந்த போலீசார் ஒருவர் என்னை எதுவும் கேட்காமல் கன்னம் கன்னமாக அறைந்துவிட்டு 'நேஷனல் மாடல் ஸ்கூல் பஸ்ஸை நிறுத்தற அளவுக்கு நீ பெரிய ஆளா... நீ என்ன போலீசா' என தாக்கி எனது ஹெட்போனை பிடுங்கி எறிந்தார். எனது மொபைல், வண்டி சாவியை எடுத்துக்கொண்டு போய்விட்டார். என்கிட்ட ஹாஸ்பிடல் போக கூட காசில்ல சார். நேத்து 500 ரூபாய் வைத்திருந்தேன். அதிலும் 200 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு 300 ரூபாய் வைத்திருந்தேன்.

Advertisment

ஸ்விகி என் பார்ட் டைம் தான் சார். நான் பிசினெஸ் செய்றேன். ஸ்டேசனரி ஷாப் ஒன்று வைத்து நடத்துறேன் சார். கரோனா காலத்துல எங்களுக்கு கடை வாடகை கட்ட முடியல சார். சாப்பாட்டுக்கு கூட காசில்லாததால ஸ்விக்கு வேலைக்கு வர வேண்டிய நெலம வந்திருச்சு. ஸ்விகில வேலை பாக்குற பசங்க எல்லாம் பி.இ, பி.காம்'னுநெறய படிச்சுருக்காங்க சார். நான் ஆறு லாங்குவேஜ் பேசுவேன் சார். கோகுலம் பார்க்ல ஐடி டிபார்ட்மென்ட்ல ஒர்க் பண்ணிருக்கேன். என்னோட குடும்ப சூழ்நிலையால் இந்த வேலைக்கு வந்திருக்கேன். வேற வேலைக்குப் போனால் குழந்தையை பார்த்துக்க முடியாது. சில டைம் கடைல ப்ராஜெக்ட் வரும் அந்த சமயத்துல கம்பெனில வேலை செய்தா என்னால லீவ் போடமுடியாது. ஒருநாள் லீவ் தருவாங்க ரெண்டு நாள் லீவு தருவாங்க,மூணாவது நாள்தரமாட்டாங்க சார். அதுனால ஸ்விகில வேலை செய்யுறேன். காலேஜ், ஸ்கூல் ப்ராஜெக்ட் வந்தா ஸ்விகிய லாக் அவுட் பண்ணிட்டு போயிடுவேன். எனக்கு கன்வீனியென்ட்டா இருக்கறதாலதான் ஸ்விகில ஒர்க் பண்றேன். இல்லனா நானும் கம்பெனிக்கு வேலைக்கு போயிருப்பேன் சார்'' என்றார் கண்ணீருடன்.

attack police swiggy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe