Tear off the cover and steal the liquor bottles in the lorry

மதுராந்தகத்திலிருந்து சிவகங்கைக்கு கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதி அரசு டாஸ்மாக் லோடு ஏற்றிச் சென்ற லாரி திருச்சி டோல்பிளாசாவில் நிற்கும் சமயத்தில் லாரியின் தார்பாயை கிழித்து 36 பெட்டி அடங்கிய 725 பாட்டில்கள்திருடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக லாரியின் ஓட்டுநர் செல்வம் சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது சம்மந்தமாக சமயபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

அந்த மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகள் 23.01.2022-ம் தேதி முதல் திருச்சி-சென்னை வரும் வழியில்உள்ள அனைத்து CCTV கேமராக்களையும்ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில் 03.02.2022-ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின்படி சிறுகனூர் சணமங்களம் பிரிவு ரோடு, திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சந்தேகத்திற்கு இடமாக இருந்த நபர்களான கோடீஸ்வரன் (கும்மிடிப்பூண்டி), பழனிசாமி (கீரனூர்), தங்கபாண்டி, தினேஷ் மற்றும் கிரி (சென்னை) ஆகியோர்களை விசாரணை செய்தனர்.

Advertisment

Tear off the cover and steal the liquor bottles in the lorry

அதில் அவர்கள், அரசு டாஸ்மாக் லோடு லாரி நெடுஞ்சாலையில் வரும்போது தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி லோடு லாரியின் முன்பக்கம் ஒரு வாகனமும், பின்புறம் ஒரு வாகனமும் சென்று, லாரியின் மீது ஏறி தார்பாயை கிழித்து மதுபாட்டில் பெட்டிகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களை கைது செய்து அவர்கள் திருடிச் சென்ற மதுபாட்டில்களை விற்ற பணம் 1,40,000/-மும் மீதமுள்ள 103-பாட்டில்களும்கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.