Advertisment

''ஏறுனா ரயிலு... எறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு... - மாணவனின் பேச்சால் மிரளும் ஆசிரியர்கள்   

 Teachers who are shocked by the student's speech

மாணவர்களின் சீர்கெட்ட நடவடிக்கைகளால் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கத்தான் செய்கிறது. ஓடும் பேருந்துகளில் ஏறுவது, பேருந்துகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் அனுதினமும் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. இதைவிட அறிவைக்கற்பிக்கும் ஆசிரியர்களிடமே ஒழுக்க குறைவாக மாணவர்கள் நடந்து கொள்ளும் காட்சிகள் ஏராளம் ஏராளம். அப்படி ஒரு வீடியோ காட்சி ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மாணவன் ஒருவன் ஆசிரியரிடம் மிரட்டும் வகையில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பேசும் அந்த மாணவன், ''ஏறுனா ரயிலு... எறங்குனா ஜெயிலு... போட்டா பெயிலு... என ரைமிங் வசனத்துடன் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளான். இதனை அங்கிருந்த ஆசிரியர்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில மாணவர்கள் ஆசிரியர்கள் என்றும் பாராமல் இவ்வாறு மிரட்டும் தொனியில் பேசுவதாலும்,நடந்துகொள்வதாலும் பள்ளிக்கு வரவே அச்சமாக உள்ளது என ஆசிரியர்களும், ஆசிரியைகளும் நேற்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Theni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe