Advertisment

பள்ளி சத்துணவுக்கூடங்களில் தேங்கிக் கிடக்கும் மளிகை பொருட்கள்! தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கை!

 Teachers union demands Tamil Nadu government

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகள் 37,358, அரசு உதவிபெறும் பள்ளிகள் 8,386 என தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 45,744 பள்ளிகளில் முறையே, அரசு பள்ளிகளில் 54,71,544 மாணவர்களும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 28,44,693 மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.

Advertisment

பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதியஉணவு வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு சமைப்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15 நாட்களுக்கு முன்பாக மளிகைபொருட்கள் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். தற்போது கோவிட்19 என்ற கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மாரச் 17லிருந்து மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் சத்துணவு வழங்கப்படவில்லை. ஆகையால் சமையலுக்கு வந்திறங்கிய அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைபொருட்கள் இரண்டு மாதங்களாக பள்ளி சத்துணவுக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ளது. அரிசி, பருப்பு உள்ளிட்டபொருட்கள் கெட்டுப்போகவும் வாய்ப்புள்ளது.

Advertisment

எனவே தமிழக அரசு பள்ளி சத்துணவு மையங்களில் தேங்கிக்கிடக்கும் மளிகை பொருட்களை ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர் குடும்பங்களுக்கு வழங்கி உதவ ஆவணசெய்யும்படி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

corona virus covid 19 teachers union tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe