இன்றைய இளைஞர்கள் கல்லூரி மாணவர்கள் சிகை அலங்காரம் என்ற பெயரில் தலை முடியை இஷ்டப்படி வெட்டிக் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். சில தனியார் பள்ளி கல்லூரிகளில் இது போன்ற சிகை அலங்காரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசுப் பள்ளி கல்லூரி மாணவர்கள் சிகை அலங்காரம் அலங்கோலமாக உள்ளது.

Advertisment

teacher's requests

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ஆவணத்தான்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சிகை அலங்கார நிபுணர்களுக்கு வேண்டுகோள் என்ற தலைப்பில் ஒரு துண்டு பிரசுரம் தயாரித்து அதை சிகை அலங்காரம் செய்யும் கடைகளில் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தலையில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒருபக்கம் மட்டும் முடி வெட்டுவதை தவிர்க்கலாம் என்று கடை கடையாக சென்று ஆசிரியர்கள் வழங்கி வருகின்றனர்.