சமவேலைக்கு சமஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை வளாகத்தில் இடைநிலை ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர்களிடம் போராட்டத்திற்கு தேமுதிக ஆதரவு அளிக்கிறது என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை தேமுதிக சார்பில் எடுத்துரைக்கப்படும் என்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கு தேமுதிக தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார்.