ADVERTISEMENT

புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி மாவட்டத்திற்கு ஆசிாியா்கள் எதிா்ப்பு

12:42 PM Jun 20, 2018 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

குமாி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கல்வி மாவட்டத்திற்கு ஆசிாியா்கள் எதிா்ப்பு தொிவித்துள்ளனா்.

குமாி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றனா். இந்தநிலையில் திருவட்டாரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்க வேண்டுமென்று கடந்த தி.மு.க ஆட்சியின் போது குமாி மாவட்ட ஆசிாியா்கள் சங்கங்கள் வலியுறுத்தினாா்கள். அப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து கடந்த 7 ஆண்டுகளாக இந்த கோாிக்கையை வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில் திருவட்டாரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்ட அறிவிப்பை சட்டமன்றத்தில் அரசு அறிவித்தது. அதன்படி தக்கலை கல்வி மாவட்டத்தில் இருந்து திருவட்டாா் சரகத்தையும் குழித்துறை கல்வி மாவட்டத்தில் இருந்து மேல்புறம் சரகத்தையும் இணைக்கப்பட்டது.

இந்தநிலையில் திருவட்டாா் கல்வி மாவட்ட அலுவலகம் ஓரு வாரத்தில் திடீரென்று மாா்த்தாண்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது ஆசிாியா்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆசிாியா் சங்கத்தினர்... திருவட்டாாில் புதிய கல்வி மாவட்டம் செயல்படும் நிலையில் கோதையாறு, குற்றியாறு, சிற்றாறு, பேச்சிப்பாறை, திருவட்டாா் பகுதிகளை சோ்ந்த ஆசிாியா்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் தற்போது ஓருவாரம் மட்டும் செயல்பட்ட அந்த அலுவலகம் மாா்த்தாண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி வாளகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த ஆசிாியா்கள் 40 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது.

ஏற்கனவே குழித்துறை கல்வி மாவட்டம் மாா்த்தாண்டத்தில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் செயல்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில் திருவட்டாா் கல்வி மாவட்ட அலுவலத்தை அங்கு கொண்டு சென்று இருக்கிறாா்கள். இதற்கு காரணம் விஜயதரணி எம்.எல்.ஏ தான்.

ஒரு கல்வி மாவட்டம் எந்த இடத்தை தலைமையிடமாக கொண்டு செயல் படுகிறதோ அந்த இடத்தில் தான் அலுவலகமும் செயல் பட வேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால் மாவட்ட கலெக்டரும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாாியும் அந்த ஆணையை மீறி உள்ளனா்.

பத்மனாபுரம் தொகுதிக் குட்பட்ட திருவட்டாாில் கல்வி மாவட்ட அலுவலகத்தை செயல்பட விடாமல் சம்மந்தமே இல்லாத விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மாா்த்தாண்டத்தில் செயல்படும் அந்த அலுவலகத்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. உடனடியாக அந்த அலுவலகத்தை மீண்டும் திருவட்டாாில் கொண்டு வர பத்மனாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் அந்த கல்வி மாவட்டம் எங்களுக்கு தேவையில்லை. இது சம்மந்தமாக திருவட்டாா் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து ஆசிாியா்களும் போராட்டம் நடத்துவோம் என்றாா்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT