accident

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர், இதில் கல்பாக்கத்தில் செயல்படும் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த மூன்றுநாட்களாக நடத்தி வருகின்றது.

Advertisment

இதில் கலந்துக்கொள்ள தேர்வு செய்யப்பட்ட 37 மாணவர்களை திருப்பேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து உடற்பயிற்சி ஆசிரியர் அன்பரசன் தனக்கு சொந்தமான டாடா ஏசி லோடு ஆட்டோவில் சட்டத்துக்கு புறம்பாக 37 மாணவர்களையும் ஆடு, மாடுகளை ஏற்றுவதைப்போல ஏற்றிக்கொண்டு அன்பரசனும் உடன் சென்றார் கிட்டதட்ட டிரைவருடன் 38 பேரை ஏற்றிக்கொண்டு திருப்பேரூரில் இருந்து கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த லோடு ஆட்டோ ஆலத்தூரை கடந்து கருங்குழி என்னுமிடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே வந்துக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கழிந்து விபத்துக்குள்ளாகியது.

Advertisment

இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர் இதில் ஆலத்தூரை சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவனின் கை லோடு ஆட்டோவின் கீழ் மாட்டியதில் அவன் கை துண்டானது உடனே விரைந்துவந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் சிலரும் மாணவர்களை உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றனர். மாணவன் பிரகாஷை மட்டும் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், மாணவனின் கை மட்டும் சிகிச்சையில் மீண்டும் இணையாவிட்டால் அவனின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும், சம்பவத்துக்கு காரணமான உடற்பயிற்சி ஆசிரியர் அன்பரசனின் பண ஆசையாலும், அலட்சியத்தாலும் நடந்த விபத்தை கண்டித்து மக்கள் போராடிவரும் நிலையில் உடற்பயிற்சி ஆசிரியர் அன்பரசன் தலைமறைவாக உள்ளார் அவரை போலீஸ்சார் தேடிவருகின்றா, மாமல்லபுரம் டி.எஸ்.பி அமல்ராஜ் வழக்கை விசாரித்து வருக்கின்றனர்

Advertisment