தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் குடியரசு தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்றனர்.

Advertisment

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் காணொளி மூலம் நடந்த நிகழ்ச்சியில 47 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உள்பட பலர் கலந்துக்கொணடனர்.

Advertisment

இதில், சென்னை அசோக்நகர் மகளிர் பள்ளி தலைமையாசிரியர் சரஸ்வதி தேசிய விருது பெற்றார். அதேபோல், விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திலீப்பும் விருது பெற்றார். மேலும், புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பம் இந்திராகாந்தி அரசு பள்ளி ஆசிரியர் ராஜ்குமாரும் விருது பெற்றார்.