letter1

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்த நிலையில் 20- ந் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பள்ளிகல்வி துறை இயக்குநரின் பள்ளி விடுமுறை பற்றிய அறிவிப்பில் 21 ந் தேதி முதல் விடுமுறை என்ற அறிவிப்பால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறையில் தொடக்கக்கல்வி துறையின் கீழ் இயங்கும் 1 முதல் 8 வகுப்பு வரை இயங்கும் தொடக்கக்கல்வி அலகில்

Advertisment

19 /04/2018 அன்று பள்ளி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட வேலை நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை

20/04/2018 அன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால் பள்ளி விடுமுறை 21/04/2018 தொடங்குகிறது, இதை மட்டுமே தனது சுற்றிக்கையில் குறிப்பிட்டுவிட்டு, தொடக்கல்வி அலகின் கீழ் இயங்கும் , தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தனியாக 19/04/ 2018 கடைசி வேலை நாள் என குறிப்பிடாத காரணத்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

Advertisment