Teachers and staff struggle at Annamalai University

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், செல்ல பாலு, பரணி, ரொனால்டோரோஸ், இமயவரம்பன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Advertisment

ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்குழு நிலவைத் தொகைகளை அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், யுஜிசி விதிமுறைகளின் படி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகு பெற்ற முனைவர் பட்டங்களுக்கான ஊக்கத்தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக அயர் பணியிட ஆசிரியர்களை அவர்கள் தற்போது பணிபுரியும் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலேயே உடனடியாக உள்ளெடுப்பு செய்தல் மற்றும் பல்கலைக்கழக துறைகளில் காணப்படும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப அயற்பணியிட ஆசிரியர்களை பல்கலைக்கழகத்திற்கு திரும்ப அழைக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை வழங்கப்படாமல் உள்ள காலம் முறை பதவி உயர்வுகளை உடனடியாக வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

இந்த போராட்டத்திற்கு அண்ணாமலைப்பல்கலைக்கழக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆதரவு தெரிவித்து 20-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கூட்டமைப்பின் செயற்குழுவை முடிவின் படி அடுத்த கட்ட நடவடிக்கை செல்ல இருப்பதாக ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.