The teacher who lost millions in search of work!

Advertisment

திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் தனம் (30). இவர், கூடுதலாக பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு இணையதளத்தில் பகுதி நேர வேலையையும், முழு நேர வேலையையும் தேடியுள்ளார். அதனை பயன்படுத்தி இணையதளம் மூலம் மர்ம நபர் ஒருவர், குறுஞ்செய்தி அனுப்பி அவற்றில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளில் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.

அதில் முதல் இலக்காக 140 ரூபாய் ரீசார்ஜ் செய்ததில் 300 ரூபாய் கிடைத்துள்ளது. அடுத்து இரண்டாவது முறை 5 ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், மீண்டும் 8 ஆயிரத்து 625 ரூபாய் கிடைத்துள்ளது.

இப்படி பல்வேறு தவணைகளில் பணத்தை செலுத்தி திரும்பப்பெற்றுள்ளார் ஆசிரியை. இப்படிபயேபல தவணைகளில் சுமார் 13லட்சத்து 77ஆயிரம் ரூபாய் பணத்தை ஆசிரியை தனம் திரும்ப கிடைக்கும் என்றுஇழந்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைமில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.