Teacher suspended in Vellore govt school girls in  matter of releasing videos of reels

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12 - ம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்றுஇன்ஸ்டாகிராமில்வீடியோ(ரீல்ஸ்) வெளியிட்டிருந்தனர். அதில், மாணவிக்குவலைக்காப்புநடத்துவதற்கான பத்திரிக்கை கார்டை போனிலேயே தயார் செய்து பள்ளியின் மேலே தளத்தில் வளைகாப்பு நடத்தத் தேவையான பொருட்களுடன், மாணவி ஒருவரை அமர வைத்து வளைகாப்பு நடத்துவது போன்று வீடியோ பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தவீடியோவேகமாகப் பரவியது.

Advertisment

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழியிடம் கேட்ட போது, இது மாணவிகள் தொடர்பான பிரச்சனை என்பதால்நிதானமாகத்தீர விசாரித்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து விசாரித்துள்ளோம். மேலும் இப்போதைக்கு அந்த பள்ளியில் மட்டும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்களையும் மாணவிகளோடு அமர்ந்து சாப்பிடச் சொல்லியுள்ளோம். ஏற்கனவே பள்ளிக்குசெல்போன்எடுத்து வரக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அந்த மாணவிகளின் பெற்றோரையும்அழைத்துப்பேசதிட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மாணவிகளின் வகுப்பு ஆசிரியைசமூண்டீஸ்வரியைபணி இடைநீக்கம் செய்துவேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இதுகுறித்து தலைமை ஆசிரியர்பிரேமாவிடம்விளக்கம் கேட்டுநோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.