Teacher Selection Board Appeal dismissed!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய குளறுபடியால் பணி வழங்க மறுக்கப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 34 பேருக்கு முதுகலை ஆசிரியர் பணி நியமனம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று தகுதியின் அடிப்படையில் பொதுப் பிரிவில் இடம்பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 34 பேரை பொதுப்பிரிவில் பணி நியமனம் செய்யாமல், பேக்லாக் காலி இடத்தில் உள்ள மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்துள்ளனர். இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 34 பேர் முதுகலை ஆசிரியராக நியமனம் செய்யப்படுவது தடுக்கப்பட்டது.

Advertisment

Advertisment

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேர்வாணையத்தின் முடிவு தவறு என்று தீர்ப்பு வழங்கினார். ஆனால் சமூகநீதி கோட்பாட்டை புரிந்துகொள்ளாமல், தேர்வு வாரியம் அதனை எதிர்த்து தலைமை நீதிபதி அடங்கிய இரண்டு நீதிபதிகள் முன்பு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தகுதியின் அடிப்படையில் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பொதுப்பிரிவில் பணிநியமனம் வழங்காதது தவறு. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு சரிதான். இதனால் பாதிக்கப்பட்ட 34 பேருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பணி ஆணை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, தமிழ்நாடு தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.